இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மன்னன் மனமாற்றம் (பகுதி - 2)

 திருமறைக்காட்டின் முதன்மைத் தெரு வழியே இரு குதிரைகள் பூட்டிய அந்தத் தேர் விரைந்து கொண்டிருந்தது. ஆயினும், அத் தேரில் வீற்றிருந்த மங்கையர்க்கரசி மற்றும் குலச்சிறை ஆகியோரின் நெஞ்சத்து எண்ணங்கள் தேரினும் விரைவாக நகர்ந்துகொண்டிருந்தன. சம்பந்தையர் சோழநாட்டுக்குட்பட்ட திருமறைக்காட்டருகிலுள்ள மாளிகையொன்றில் தங்கியிருப்பதாக மங்கையர்க்கரசி விவரம் பெற்றிருந்தாள். எனவே, அவரைச் சந்திக்கும் பொருட்டு குலச்சிறையையும் துணைக்கழைத்துக் கொண்டு திருமறைக்காட்டுக்குப் புறப்பட்டாள். குலச்சிறையின் மனம் மிகவும் குழம்பியிருந்தது. சம்பந்தையரை மதுரைக்கு வருமாறு இணங்கச் செய்வது எப்படி என்று எண்ணியவாறே மங்கையற்கரசியின் முகத்தை ஏறிட்டார். மங்கையற்கரசி: என்ன அமைச்சரே? ஏதேனும் குழப்பமா? குலச்சிறை: ஆம் தேவி!! சம்பந்தையரிடம் நமது சிக்கலை எவ்வாறு எடுத்துரைப்பது? அவர் நமது திட்டத்துக்கு இணங்குவாரா? மங்: வீண் கவலை வேண்டாம். சமணர்கள் சொற்கேட்டு நமது மன்னர் கருவூலத்துப் பொருளையெல்லாம் வீணாக்கிக்கொண்டிருப்பதை எடுத்துச் சொல்வோம். சம்பந்தையர் இது போன்ற பல சிக்கல்களை எளிதில் வென்றிருக்கிறார். சோழநாட்டுக்குட்பட்ட பல குறுநில

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

மனித நாகரிகங்கள் உருவான காலந்தொட்டு வெவ்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மக்கள் குழுமங்களுக்கிடையே தொடர்பாடல்கள் நிகழ்ந்து வந்துள்ளன. பொதுவாகப் பார்க்கும்போது உலகின் ஒவ்வொரு பண்பாட்டுக் குழுமமும் தமது உறுப்பினர்களிடையே கருத்துக்களைப் பரிமாறுவதற்காக வெவ்வேறு மொழிகளைப் பயன்படுத்தி வந்துள்ளன. இன்றும் கூட இனக்குழுமங்களை வகைப்படுத்தும் போது மொழியின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சீனர், அரேபியர், எசுப்பானியர் போன்ற இனக்குழுமங்களில் மொழியே பிரிக்கும் எல்லைக்கோடாகக் காணப்படுகின்றது. காலப்போக்கில் வெவ்வேறு மக்கள் குழுமங்களுக்கிடையிலான தொடர்பாடலின் விளைவாக, அவற்றின் மொழிகளும் மாற்றம் பெற்று வந்துள்ளன. இன்று, முழுமையாகத் தூய்மை பெற்ற ஒரு "வாழும்" மொழியைக் காணல் அரிது. வாணிகம், பேரரசுகள், மதங்கள் போன்ற இன்னோரன்ன காரணங்களினால் ஒரு மொழியில் இன்னொரு மொழியின் தாக்கம் ஏற்படுகின்றது. இத்தாக்கம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்குமாயின், கலப்பு ஏற்படுகின்ற மொழி தனது தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருக்கலாம். மாறாக, அளவுக்கு மீறிய பிறமொழிக்

செஞ்சிலுவைச் சங்கம்

படம்
சூன் 24, 1859ம் ஆண்டு, மாலைநேரத்தில் வடக்கு இத்தாலியின் சிறு நகரான சோல்ஃபெரினோ நகருக்கூடாக ஒரு குதிரை வண்டி நகர்ந்து கொண்டிருக்கிறது. குதிரை வண்டியில் ஒரு வணிகர். அவரது பெயர் எ ன்றி டுனான்ட். சுவிட்சர்லாந்து வணிகரான டுனான்ட், அப்போதைய பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகிய அல் சீ ரியாவில் வணிகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். எனினும், பிரெஞ்சு வணிக நிறுவனம் அவரது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தது. எனவே, பிரெஞ்சு ப் பேரரசனா கிய மூன்றாம் நெப்போலியனைக் கண்டு இந்த ச் சிக்கலு க்குத் தீர்வு காணலாம் என அவர் எண்ணியிருந்தார். சோல்ஃபெரினோ நகரின் இருமருங்கிலும் டுனான்ட் கண்டதோ காயமடைந்து கு ரு தி வெள்ளத்தில் மரண ஓலமிட்டுக்கொண்டிருக்கும் போர்வீரர்களைத் தான். இன்றைய இத்தாலியின் சிறுபகுதியான சார்டினியாவுக்கும் ஆசுத்திரியப் பேரரசுக்குமிடையில் பெரும் போர் மூண்டிருந்தது. சார்டினியாவின் சுதந்திரத்தை ஆதரித்து ஃ பிரான்சும் போரில் கலந்துகொண்டிருந்தது. போரின் உக்கிரம் அன்றைய நாளில் மாத்திரம் 40,000 வீரர்களைக் காயப்படுத்தியிருந்தது. சரியான மருத்துவ வசதிகளோ, கவனிப்போ அற்று அத்தனை போர் வீரர்களும் குற்

மன்னன் மனமாற்றம் (பகுதி - 1)

அமைச்சர் குலச்சிறைக்குத் தூக்கம் கொள்ளவில்லை. ஒரு பெரும் சிக்கல் அவர் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. பள்ளியறையில் இருக்கப் பிடிக்காமல் அரண்மனைப் பூந்தோட்டத்துக்குச் சென்று சிறிது நேரம் உலாவி விட்டு வரலாம் எனக் கருதிப் பூந்தோட்டப் பக்கம் நடக்கலானார். பூந்தோட்டத்தை நெருங்கும் வேளையில் அங்கே ஏற்கனவே வேறொருவர் நடமாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. குலச்சிறையும் சற்றே வியப்புடன் அந் நபரை நோக்கி நடந்தார். சற்றுத் தூரம் சென்றதும் அது ஒரு பெண் என்பது புலனாயிற்று. குலச்சிறைக்கு எதுவும் புரியவில்லை. அரண்மனைப் பூந்தோட்டத்தில் இந்த இரவு வேளையில் உலவுவது யாராயிருக்கும்? என்ற எண்ணத்துடன் அப்பெண்ணை நெருங்கினார். குலச்சிறையின் காலடி ஓசையை உணர்ந்து அப் பெண் குலச்சிறை வரும் திசையில் திரும்பினாள். அப்பெண்ணைக் கண்டதும் குலச்சிறை உடனே இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தினார். பாண்டிமாதேவி, சோழர்குலக் கொழுந்து, பாண்டிய நாட்டின் பட்டத்தரசியான மங்கையர்க்கரசி அங்கே நின்றுகொண்டிருந்தாள். குலச்சிறை: பாண்டிமாதேவிக்கு அடியேனின் வணக்கங்கள்!! மங்கையர்க்கரசி: வணக்கம் அமைச்சரே!! குல: தேவி!! இவ்விரவு வேளையில் தாங்கள் பூந்த

தனித் தமிழ் இயக்கம்

படம்
 தமிழ் மொழி உலகின் பழமையான மொழிகளில் ஒன்று. தமிழ் மொழியை எழுதுவதற்கு துவக்க காலத்தில் பயன்பட்ட தமிழ்ப்பிராமி அல்லது தமிழி எழுத்துக்களைத் தாங்கிய பானையோடுகள் மற்றும் கல்வெட்டுக்கள் குறைந்தது 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்மொழி எழுத்து மொழியாக வழங்கி வந்ததை உறுதி செய்கின்றன. மேலும், 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியில் இலக்கியங்கள் எழுந்துவிட்டன. கழக இலக்கியங்களின் காலம் பொ.ஊ.மு. 300 - பொ.ஊ. 300 என பரவலாகக் கருதப் படுகிறது. இத்தகைய பழமையும் வளமும் கொண்ட தமிழ்மொழி பிற்காலத்தே பிறமொழிச் செல்வாக்குகளினால் சிதைவுறத் துவங்கியது. கழகக் காலத்தின் பின் தமிழகத்தை ஆண்ட பேரரசுகள் தமிழில் சமக்கிருதச் சொற்களையும் கிரந்த எழுத்துக்களையும் அறிமுகப்படுத்தின. இவற்றின் வரவு தமிழ்மொழியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் தன் இயல்பு சிதைந்து மாறியது. மணிப்பிரவாளம் எனும் புதிய செய்யுள் நடை உருவாகி தமிழ்ப் பாடல்களில் சமக்கிருதச் சொற்கள் பரவலாகப் பயன்படுத்தும் நிலையும் உருவாகியது. இத்தகைய நிலையில் தமிழ் மொழியின் தூய்மையை மீட்கும் வகையில் தமிழறிஞர்கள் பலரது கூட்டு முயற்சியில் உருவானதே தனித் தமிழ் இயக