இடுகைகள்

பரிதிமாற் கலைஞர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனித் தமிழ் இயக்கம்

படம்
 தமிழ் மொழி உலகின் பழமையான மொழிகளில் ஒன்று. தமிழ் மொழியை எழுதுவதற்கு துவக்க காலத்தில் பயன்பட்ட தமிழ்ப்பிராமி அல்லது தமிழி எழுத்துக்களைத் தாங்கிய பானையோடுகள் மற்றும் கல்வெட்டுக்கள் குறைந்தது 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்மொழி எழுத்து மொழியாக வழங்கி வந்ததை உறுதி செய்கின்றன. மேலும், 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியில் இலக்கியங்கள் எழுந்துவிட்டன. கழக இலக்கியங்களின் காலம் பொ.ஊ.மு. 300 - பொ.ஊ. 300 என பரவலாகக் கருதப் படுகிறது. இத்தகைய பழமையும் வளமும் கொண்ட தமிழ்மொழி பிற்காலத்தே பிறமொழிச் செல்வாக்குகளினால் சிதைவுறத் துவங்கியது. கழகக் காலத்தின் பின் தமிழகத்தை ஆண்ட பேரரசுகள் தமிழில் சமக்கிருதச் சொற்களையும் கிரந்த எழுத்துக்களையும் அறிமுகப்படுத்தின. இவற்றின் வரவு தமிழ்மொழியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் தன் இயல்பு சிதைந்து மாறியது. மணிப்பிரவாளம் எனும் புதிய செய்யுள் நடை உருவாகி தமிழ்ப் பாடல்களில் சமக்கிருதச் சொற்கள் பரவலாகப் பயன்படுத்தும் நிலையும் உருவாகியது. இத்தகைய நிலையில் தமிழ் மொழியின் தூய்மையை மீட்கும் வகையில் தமிழறிஞர்கள் பலரது கூட்டு முயற்சியில் உருவானதே தனித் தமிழ்...