இடுகைகள்

சப்பான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆயிரம் கொக்குகளின் கதை

படம்
  சிறுமி சதகோ சசாகிக்கு அப்போது இரண்டு வயதிருக்கும். சப்பானின் இரோசிமா நகரில் அவளது குடும்பம் வசித்து வந்தது. 1945ம் ஆண்டு ஆகத்து 6ம் திகதி அமெரிக்கப் போர்விமானமான, எனோலா கே தனது நாட்டு விஞ்ஞானிகளால் புதிதாகத் தயாரிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த குண்டை இரோசிமா மீது வீசுகிறது. குண்டின் சக்தி 2 கிமீக்கு அப்பால் உள்ள சதகோவின் வீட்டையும் தாக்குகிறது. குண்டின் அதிர்ச்சியால் வீட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டாள் சதகோ. ஆனால், அவளுக்குப் பெரிதாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவளது பெற்றோர் அவளைத் தூக்கிக் கொண்டு தப்பி ஓடுகின்றனர். 1955 அளவில் சதகோ சசாகி சதகோ வளர்ந்ததும் அவளைப் பாடசாலையில் சேர்க்கின்றனர் அவளது பெற்றோர். பாடசாலையில் திறமைகாட்டிய சதகோ, தனது பாடசாலையின் அஞ்சலோட்ட அணியிலும் இடம்பிடித்தாள். 1954 நவம்பர் மாதமளவில் சதகோவின் கழுத்து மற்றும் காதின் பின்னால் வீக்கம் ஏற்பட்டது. மேலும் கால்களிலும் ஊதா நிறப் பொட்டுக்கள் உருவாயின. பதறிப்போய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பெற்றோருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. சதகோவுக்கு குருதிப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலதிக சிகிச்சைக்காக அவள் மர...

உயரப் பறக்கும் ஃபீனிக்சுப் பறவை

படம்
  ஆகத்து 9, 1945 நேரம் காலை 11.00 மணி, ஐக்கிய அமெரிக்க விமானப்படையின் பொக்சார் விமானம் தனது தாக்குதல் இலக்கை துல்லியமாகக் கணித்து அணுகுண்டை வீசுகிறது. சில நிமிடங்களில் நாகசாகி நகரை காளான் குடை புகை மூட்டம் சூழ்கிறது. அணுகுண்டின் கதிர்வீச்சு 70,000 பேரைப் பலி கொள்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு இரோசிமாவில் வீசப்பட்ட 'சின்னப் பையன்' 140,000 பேரைக் காவு வாங்கியிருந்தான். இழப்பின் கோரம் கண்டு சப்பானியப் பேரரசர் இறோகித்தோ நிபந்தனையற்ற சரணடைதலுக்கு உடன்பட்டார். அணுகுண்டு வீச்சின் பின்னர் இரோசிமாவிலும் நாகசாகியிலும் உருவான காளான் முகில்கள் உலகப்போர் ச ப்பானின் 40%மான தொழிற்சாலைகள் மற்றும் உட்கட்டுமான வசதிகளை நிர்மூலமாக்கியிருந்தது. ச ப்பானின் உற்பத்தித்திறன் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. சாம்பல் மேடுகளாயிருந்த தொழிற்சாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டியிருந்தது. எவ்வாறாயினும் ச ப்பானிய மக்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் முனைப்பைக் கொண்டிருந்தனர். புதிய பொருளாதாரத் திட்டங்கள் வரையப்பட்டன. போர் நிறைவடைந்ததால் மில்லியன் கணக்கான போர்வீரர்கள் வேறு வேலை தேடுமுகம...