இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்த் தாத்தா

படம்
 ஏட்டுச் சுவடிகளிலேயே செல்லரித்து மடிந்து போயிருக்க வேண்டிய பல்வேறு பழந்தமிழ் நூல்களைத் தேடிப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றியவர் 'தமிழ்த் தாத்தா' என்று அன்போடு அழைக்கப்படும் உ. வே. சாமிநாதன். ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகிய மூன்றும், பத்துப்பாட்டு நூல்கள் அனைத்தும், எட்டுத்தொகை நூல்களில் புறநானூறும் சாமிநாதனின் பெருமுயற்சியால் ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுக்கூடமேறின. இவைதவிர பல்வேறு வெண்பா, அந்தாதி, தூது, உலா, பரணி வகை நூல்களையும் தேடிப் பதிப்பித்தார். இவர் அச்சிட்ட நூல்களின் எண்ணிக்கை 90ஐத் தாண்டுகின்றது. இந்நூல்களுக்கான மூலச் சுவடிகளைப் பெறுவதற்காக ஊர் ஊராகப் பயணப்பட்டு பல இடர்களைச் சந்தித்து அயராது முயற்சி செய்து வெற்றி கண்டவர். ஏட்டுச் சுவடிப் பிரதிகளைச் சேகரித்து செல்லரித்த பிரதிகளிலே எழுதியிருப்பது இன்னதென்று உணர்ந்து பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்கிச் சரியானது இன்னதென்று தேர்ந்து பதிப்பிப்பதென்பது அத்தனை இலகுவான செயலல்ல. தேடல் ஒருவகை இடர் என்றால், சுவடிகளிலே எழுதியிருப்பது இன்னதென்று அறிவது

உயரப் பறக்கும் ஃபீனிக்சுப் பறவை

படம்
  ஆகத்து 9, 1945 நேரம் காலை 11.00 மணி, ஐக்கிய அமெரிக்க விமானப்படையின் பொக்சார் விமானம் தனது தாக்குதல் இலக்கை துல்லியமாகக் கணித்து அணுகுண்டை வீசுகிறது. சில நிமிடங்களில் நாகசாகி நகரை காளான் குடை புகை மூட்டம் சூழ்கிறது. அணுகுண்டின் கதிர்வீச்சு 70,000 பேரைப் பலி கொள்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு இரோசிமாவில் வீசப்பட்ட 'சின்னப் பையன்' 140,000 பேரைக் காவு வாங்கியிருந்தான். இழப்பின் கோரம் கண்டு சப்பானியப் பேரரசர் இறோகித்தோ நிபந்தனையற்ற சரணடைதலுக்கு உடன்பட்டார். அணுகுண்டு வீச்சின் பின்னர் இரோசிமாவிலும் நாகசாகியிலும் உருவான காளான் முகில்கள் உலகப்போர் ச ப்பானின் 40%மான தொழிற்சாலைகள் மற்றும் உட்கட்டுமான வசதிகளை நிர்மூலமாக்கியிருந்தது. ச ப்பானின் உற்பத்தித்திறன் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. சாம்பல் மேடுகளாயிருந்த தொழிற்சாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டியிருந்தது. எவ்வாறாயினும் ச ப்பானிய மக்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் முனைப்பைக் கொண்டிருந்தனர். புதிய பொருளாதாரத் திட்டங்கள் வரையப்பட்டன. போர் நிறைவடைந்ததால் மில்லியன் கணக்கான போர்வீரர்கள் வேறு வேலை தேடுமுகம

அக்கரைச் சீமையின் அழகு

படம்
  இன்றைய சிங்கப்பூரினைக் கண்டு வியந்து பாராட்டும் பலர் 1965ல் சிங்கப்பூரைக் கண்டிருந்தால் அதிர்ச்சியடைவர். ஏனென்றால் இனமுறுகல்களுக்குள் சிக்கித் தவித்த ஒரு நாட்டை அவர்கள் காண நேரிட்டிருக்கும். பிரித்தானியக் குடியேற்ற நாடாக விளங்கிய சிங்கப்பூர் இரண்டாம் உலகப் போரில் சப்பானிய ஆதிக்கத்துக்குட்பட்டு பெரும் அழிவுகளையும் சந்தித்தது. 1959ல் பிரித்தானியாவிடமிருந்து விடுதலையடைந்த சிங்கப்பூர், 1963ல் மலாயா, போர்ணியோ ஆகியவற்றுடன் இணைந்து மலேசியக் கூட்டமைப்பாக உருவானது. ஆனால், மலேசியாவின் பெரும்பான்மை இனத்தவராகிய மலாயருக்கும், சிங்கப்பூரின் பெரும்பான்மையினராகிய சீனருக்குமிடையில் இனப் பிரச்சினைகள் உருவாயின. இதன் உச்சகட்டமாக 1964ல் இனக் கலவரங்களும் வெடித்தன. கலவரத்தை அடக்குவதற்கு வழி தெரியாத அப்போதைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான், சிங்கப்பூரை தமது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற முடிவு செய்தார். (உலக வரலாற்றிலேயே சுயவிருப்பின்றி விடுதலையடைந்த ஒரே நாடு சிங்கப்பூர் தான்.) 1965ம் ஆண்டு ஆக த்து 9ம் திகதி காலை வேளையில், மலேசியப் பாராளுமன்றம் சிங்கப்பூரை கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றும் சட்டத்தை