இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மன்னன் மனமாற்றம் (பகுதி - 3)

 பாண்டிய நாட்டின் அரண்மனை பணியாட்களின் ஆரவாரத்தால் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. சம்பந்தையரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். முந்தைய நாளில் சம்பந்தையரின் வருகை பற்றி மன்னனிடம் தெரிவித்த மங்கையர்க்கரசி ஏற்பாடுகளைச் செய்வதற்கான அனுமதியைப் பெற்றிருந்தாள். மன்னனும் எந்தவித வேற்றுமையையும் பாராட்டாது வைதீகப் பார்ப்பனரான சம்பந்தையரின் வருகைக்கு அனுமதியளித்திருந்தான். மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் ஏற்பாடுகளை நிறைவு செய்த பின் அரண்மனையின் வாயிலுக்கே வந்து சம்பந்தையரின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். சற்று நேரத்துக்கெல்லாம் பரிவாரங்களின் ஆரவாரங்கள் தூரத்தில் கேட்கத் தொடங்கின. மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் ஒலி வந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தனர். பணியாட்கள், சீடர்கள் புடைசூழ சம்பந்தையர் பல்லக்கில் பவனிவந்து கொண்டிருந்தார். பல்லக்கின் முன்னே கொடி, குடை, ஆலவட்டம் ஆகிய சின்னங்களைத் தாங்கியவாறு பணியாட்கள் வந்தனர். அவர்களுக்குப் பின்னே எட்டுப்பேர் சுமக்கும் முத்துப் பல்ல

கிரந்தம் தவிர்ப்போம்

படம்
 தமிழ் மொழி பொ.ஊ.மு. 2ம் நூற்றாண்டிலிருந்தேனும் எழுத்து வடிவில் வழங்கி வந்ததற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. இத் துவக்ககால எழுத்துமுறை தமிழி அல்லது தமிழ்ப் பிராமி என அழைக்கப்படுகின்றது. இத் தமிழி எழுத்துக்கள் ஓலைச் சுவடிகளில் எழுதப் பயன்படுத்தப்படும்போது சற்றே வளைந்த உருப்பெற்றது. இவ்வடிவ மாற்றம் ஒரு புதிய எழுத்து முறையான வட்டெழுத்து எனும் முறை தோன்ற வழிவகுத்தது. வட்டெழுத்துக்கள் பொ.ஊ. 4ம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்டது. பல்லவர்கள் சமசுகிருத மொழியைத் தமது துவக்க கால ஆட்சி மொழியாகப் பயன்படுத்தினர். மேலும், இவர்கள் வைதீக மதத்துக்குப் பேராதரவு வழங்கினர். வைதீக மதத்தின் நூல்களைச் சமசுகிருத மொழியில் எழுதுவதற்குப் பல்லவர்களுக்கு ஒரு எழுத்து முறை தேவைப்பட்டது. ஏனெனில், சமசுகிருத எழுத்து ஒலிப்பு முறைகள் அனைத்தையும் வழக்கிலிருந்த வட்டெழுத்து முறையில் எழுத முடியவில்லை. எனவே, பல்லவர்கள் சமசுகிருத மொழிக் கல்வெட்டுக்கள், பட்டயங்கள் மற்றும் நூல்களை எழுதும் நோக்கில் ஒரு புதிய எழுத்து முறையை அறிமுகப்படுத்தினர். இ