இடுகைகள்

தனித் தமிழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

மனித நாகரிகங்கள் உருவான காலந்தொட்டு வெவ்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மக்கள் குழுமங்களுக்கிடையே தொடர்பாடல்கள் நிகழ்ந்து வந்துள்ளன. பொதுவாகப் பார்க்கும்போது உலகின் ஒவ்வொரு பண்பாட்டுக் குழுமமும் தமது உறுப்பினர்களிடையே கருத்துக்களைப் பரிமாறுவதற்காக வெவ்வேறு மொழிகளைப் பயன்படுத்தி வந்துள்ளன. இன்றும் கூட இனக்குழுமங்களை வகைப்படுத்தும் போது மொழியின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சீனர், அரேபியர், எசுப்பானியர் போன்ற இனக்குழுமங்களில் மொழியே பிரிக்கும் எல்லைக்கோடாகக் காணப்படுகின்றது. காலப்போக்கில் வெவ்வேறு மக்கள் குழுமங்களுக்கிடையிலான தொடர்பாடலின் விளைவாக, அவற்றின் மொழிகளும் மாற்றம் பெற்று வந்துள்ளன. இன்று, முழுமையாகத் தூய்மை பெற்ற ஒரு "வாழும்" மொழியைக் காணல் அரிது. வாணிகம், பேரரசுகள், மதங்கள் போன்ற இன்னோரன்ன காரணங்களினால் ஒரு மொழியில் இன்னொரு மொழியின் தாக்கம் ஏற்படுகின்றது. இத்தாக்கம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்குமாயின், கலப்பு ஏற்படுகின்ற மொழி தனது தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருக்கலாம். மாறாக, அளவுக்கு மீறிய பிறமொழிக் ...