இடுகைகள்

புதிய புராணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மன்னன் மனமாற்றம் (பகுதி - 3)

 பாண்டிய நாட்டின் அரண்மனை பணியாட்களின் ஆரவாரத்தால் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. சம்பந்தையரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். முந்தைய நாளில் சம்பந்தையரின் வருகை பற்றி மன்னனிடம் தெரிவித்த மங்கையர்க்கரசி ஏற்பாடுகளைச் செய்வதற்கான அனுமதியைப் பெற்றிருந்தாள். மன்னனும் எந்தவித வேற்றுமையையும் பாராட்டாது வைதீகப் பார்ப்பனரான சம்பந்தையரின் வருகைக்கு அனுமதியளித்திருந்தான். மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் ஏற்பாடுகளை நிறைவு செய்த பின் அரண்மனையின் வாயிலுக்கே வந்து சம்பந்தையரின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். சற்று நேரத்துக்கெல்லாம் பரிவாரங்களின் ஆரவாரங்கள் தூரத்தில் கேட்கத் தொடங்கின. மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் ஒலி வந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தனர். பணியாட்கள், சீடர்கள் புடைசூழ சம்பந்தையர் பல்லக்கில் பவனிவந்து கொண்டிருந்தார். பல்லக்கின் முன்னே கொடி, குடை, ஆலவட்டம் ஆகிய சின்னங்களைத் தாங்கியவாறு பணியாட்கள் வந்தனர். அவர்களுக்குப் பின்னே எட்டுப்பேர் சுமக்கும் முத்துப் ...

மன்னன் மனமாற்றம் (பகுதி - 2)

 திருமறைக்காட்டின் முதன்மைத் தெரு வழியே இரு குதிரைகள் பூட்டிய அந்தத் தேர் விரைந்து கொண்டிருந்தது. ஆயினும், அத் தேரில் வீற்றிருந்த மங்கையர்க்கரசி மற்றும் குலச்சிறை ஆகியோரின் நெஞ்சத்து எண்ணங்கள் தேரினும் விரைவாக நகர்ந்துகொண்டிருந்தன. சம்பந்தையர் சோழநாட்டுக்குட்பட்ட திருமறைக்காட்டருகிலுள்ள மாளிகையொன்றில் தங்கியிருப்பதாக மங்கையர்க்கரசி விவரம் பெற்றிருந்தாள். எனவே, அவரைச் சந்திக்கும் பொருட்டு குலச்சிறையையும் துணைக்கழைத்துக் கொண்டு திருமறைக்காட்டுக்குப் புறப்பட்டாள். குலச்சிறையின் மனம் மிகவும் குழம்பியிருந்தது. சம்பந்தையரை மதுரைக்கு வருமாறு இணங்கச் செய்வது எப்படி என்று எண்ணியவாறே மங்கையற்கரசியின் முகத்தை ஏறிட்டார். மங்கையற்கரசி: என்ன அமைச்சரே? ஏதேனும் குழப்பமா? குலச்சிறை: ஆம் தேவி!! சம்பந்தையரிடம் நமது சிக்கலை எவ்வாறு எடுத்துரைப்பது? அவர் நமது திட்டத்துக்கு இணங்குவாரா? மங்: வீண் கவலை வேண்டாம். சமணர்கள் சொற்கேட்டு நமது மன்னர் கருவூலத்துப் பொருளையெல்லாம் வீணாக்கிக்கொண்டிருப்பதை எடுத்துச் சொல்வோம். சம்பந்தையர் இது போன்ற பல சிக்கல்களை எளிதில் வென்றிருக்கிறார். சோழநாட்டுக்குட்பட்ட பல குறு...

மன்னன் மனமாற்றம் (பகுதி - 1)

அமைச்சர் குலச்சிறைக்குத் தூக்கம் கொள்ளவில்லை. ஒரு பெரும் சிக்கல் அவர் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. பள்ளியறையில் இருக்கப் பிடிக்காமல் அரண்மனைப் பூந்தோட்டத்துக்குச் சென்று சிறிது நேரம் உலாவி விட்டு வரலாம் எனக் கருதிப் பூந்தோட்டப் பக்கம் நடக்கலானார். பூந்தோட்டத்தை நெருங்கும் வேளையில் அங்கே ஏற்கனவே வேறொருவர் நடமாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. குலச்சிறையும் சற்றே வியப்புடன் அந் நபரை நோக்கி நடந்தார். சற்றுத் தூரம் சென்றதும் அது ஒரு பெண் என்பது புலனாயிற்று. குலச்சிறைக்கு எதுவும் புரியவில்லை. அரண்மனைப் பூந்தோட்டத்தில் இந்த இரவு வேளையில் உலவுவது யாராயிருக்கும்? என்ற எண்ணத்துடன் அப்பெண்ணை நெருங்கினார். குலச்சிறையின் காலடி ஓசையை உணர்ந்து அப் பெண் குலச்சிறை வரும் திசையில் திரும்பினாள். அப்பெண்ணைக் கண்டதும் குலச்சிறை உடனே இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தினார். பாண்டிமாதேவி, சோழர்குலக் கொழுந்து, பாண்டிய நாட்டின் பட்டத்தரசியான மங்கையர்க்கரசி அங்கே நின்றுகொண்டிருந்தாள். குலச்சிறை: பாண்டிமாதேவிக்கு அடியேனின் வணக்கங்கள்!! மங்கையர்க்கரசி: வணக்கம் அமைச்சரே!! குல: தேவி!! இவ்விரவு வேளையில் தாங்கள் பூந்த...