மன்னன் மனமாற்றம் (பகுதி - 2)
திருமறைக்காட்டின் முதன்மைத் தெரு வழியே இரு குதிரைகள் பூட்டிய அந்தத் தேர் விரைந்து கொண்டிருந்தது. ஆயினும், அத் தேரில் வீற்றிருந்த மங்கையர்க்கரசி மற்றும் குலச்சிறை ஆகியோரின் நெஞ்சத்து எண்ணங்கள் தேரினும் விரைவாக நகர்ந்துகொண்டிருந்தன. சம்பந்தையர் சோழநாட்டுக்குட்பட்ட திருமறைக்காட்டருகிலுள்ள மாளிகையொன்றில் தங்கியிருப்பதாக மங்கையர்க்கரசி விவரம் பெற்றிருந்தாள். எனவே, அவரைச் சந்திக்கும் பொருட்டு குலச்சிறையையும் துணைக்கழைத்துக் கொண்டு திருமறைக்காட்டுக்குப் புறப்பட்டாள். குலச்சிறையின் மனம் மிகவும் குழம்பியிருந்தது. சம்பந்தையரை மதுரைக்கு வருமாறு இணங்கச் செய்வது எப்படி என்று எண்ணியவாறே மங்கையற்கரசியின் முகத்தை ஏறிட்டார். மங்கையற்கரசி: என்ன அமைச்சரே? ஏதேனும் குழப்பமா? குலச்சிறை: ஆம் தேவி!! சம்பந்தையரிடம் நமது சிக்கலை எவ்வாறு எடுத்துரைப்பது? அவர் நமது திட்டத்துக்கு இணங்குவாரா? மங்: வீண் கவலை வேண்டாம். சமணர்கள் சொற்கேட்டு நமது மன்னர் கருவூலத்துப் பொருளையெல்லாம் வீணாக்கிக்கொண்டிருப்பதை எடுத்துச் சொல்வோம். சம்பந்தையர் இது போன்ற பல சிக்கல்களை எளிதில் வென்றிருக்கிறார். சோழநாட்டுக்குட்பட்ட பல குறு...