விடுதலை வீரன்
இளைஞன் ரொலிலாலாவின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. தனது இன மக்களை சொந்த இடத்திலிருந்து வெளியேற்றும் சட்டத்துக்கெதிராக அவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை தழுவிய பேரணி காவல்துறையினரால் கொடூரமாக ஒடுக்கப்பட்டிருந்தது. மேலும், ரொலிலாலாவுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப்பின் அவனுக்கு விடுதலை கிட்டினாலும் அகிம்சை மீது அவன் கொண்டிருந்த அசராத நம்பிக்கை தற்போது தளர்ந்துவிட்டிருந்தது. கியூபப் புரட்சித் தலைவர் பிடல் காசுட்ரோவின் யூலை 26 இயக்கத்தின் வெற்றிகள் அவன் சார்ந்த குழுவினரை ஆயுதப் போராட்டம் பால் ஈர்க்கச் செய்தது. கெரில்லாப் போர்முறையில் நாட்டம் கொண்ட ரொலிலாலா, மார்க்சியப் போராளிகளான மாவோ மற்றும் சே குவேரா ஆகியோரால் எழுதப்பட்ட கெரில்லாப் போர் முறை பற்றிய நூல்களை வாசித்து தனது போராளிக் குழுவின் தாக்குதல் திட்டங்களைத் தீட்டுவதில் ஈடுபட்டான். அவனது குழு நாட்டின் இராணுவ மையங்கள், மின் நிலையங்கள், தொலைபேசி நிலையங்கள் போன்ற பொதுமக்களின் உயிரிழப்பு இல்லாத ஆனால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது. இதன் மூலம் தனது அரசு நிறவெறிக் ...