உயரப் பறக்கும் ஃபீனிக்சுப் பறவை

 ஆகத்து 9, 1945 நேரம் காலை 11.00 மணி, ஐக்கிய அமெரிக்க விமானப்படையின் பொக்சார் விமானம் தனது தாக்குதல் இலக்கை துல்லியமாகக் கணித்து அணுகுண்டை வீசுகிறது. சில நிமிடங்களில் நாகசாகி நகரை காளான் குடை புகை மூட்டம் சூழ்கிறது. அணுகுண்டின் கதிர்வீச்சு 70,000 பேரைப் பலி கொள்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு இரோசிமாவில் வீசப்பட்ட 'சின்னப் பையன்' 140,000 பேரைக் காவு வாங்கியிருந்தான். இழப்பின் கோரம் கண்டு சப்பானியப் பேரரசர் இறோகித்தோ நிபந்தனையற்ற சரணடைதலுக்கு உடன்பட்டார்.

அணுகுண்டு வீச்சின் பின்னர் இரோசிமாவிலும் நாகசாகியிலும் உருவான காளான் முகில்கள்
உலகப்போர் ப்பானின் 40%மான தொழிற்சாலைகள் மற்றும் உட்கட்டுமான வசதிகளை நிர்மூலமாக்கியிருந்தது. ப்பானின் உற்பத்தித்திறன் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. சாம்பல் மேடுகளாயிருந்த தொழிற்சாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டியிருந்தது. எவ்வாறாயினும் ப்பானிய மக்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் முனைப்பைக் கொண்டிருந்தனர். புதிய பொருளாதாரத் திட்டங்கள் வரையப்பட்டன. போர் நிறைவடைந்ததால் மில்லியன் கணக்கான போர்வீரர்கள் வேறு வேலை தேடுமுகமாக தொழிற்சாலைகளில் இணைந்தனர். ப்பானின் பலமாக இருந்தது அதன் கல்வி முறைமையாகும். ப்பானின் உயர் எழுத்தறிவு வீதமும் சிறந்த கல்வித்தரமும் அதன் முன்னேற்றத்துக்கு வழிகோலின. இக் கல்வி முறைமை ப்பானின் உயர்தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு உதவி புரிந்தது. மின்சாரம், நிலக்கரி, உருக்கு மற்றும் வேதியியற் தொழிற்துறைகளில் பாரிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அணுகுண்டு வீச்சின் பின் இரோசிமாவில் அமைந்திருந்த கைத்தொழில் ஊக்குவிப்பு மன்றம்
ப்பானிய மக்களின் உழைப்பினால் 1950களின் நடுப்பகுதியிலேயே ப்பானியப் பொருளாதாரம் அதன் போருக்கு முந்தைய நிலைக்கு மீண்டது. ப்பானின் 5 S முறைமை உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கு பேருதவி புரிந்தது. 1953க்கும் 1965க்கும் இடையில் ப்பானின் மொத்தத் தேசிய உற்பத்தி வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு 9%க்கும் அதிகமாக இருந்தது. உற்பத்தி மற்றும் சுரங்கத் தொழிற்துறை 13%த்தாலும், கட்டுமானத் துறை 11%த்தாலும் வளர்ச்சியடைந்தது. 1970களின் பிற்பகுதியில் நுண்மின்னணு மற்றும் குறைகடத்தி தொழில்நுட்பத்துறை வளர்ச்சி பெற்றது. கணனிகள் உட்பட மின்சாதனங்களின் ஏற்றுமதி ப்பானியப் பொருளாதாரத்தை உயர்நிலைக்கு இட்டுச் சென்றது. 1980களின் மசகு நெய் நெருக்கடிக்கு மத்தியிலும் ப்பானின் பொருளாதாரம் வளர்ச்சிப் போக்கையே காட்டி நின்றது.
ஐசூ பகுதியிலுள்ள நெல்வயல்

ப்பானின் நிலப்பகுதியில் 12% மாத்திரமே பயிர்ச்செய்கைக்கு ஏற்புடையதாயுள்ளது. எனினும் படிக்கட்டு முறைப் பயிர்ச்செய்கையினால் சிறந்த விளைச்சல் வீதத்தை பெறுகின்றது. ப்பானின் ஓரலகுப் பரப்புக்கான விளைச்சல் வீதமானது உலகின் உயர் வீதங்களில் ஒன்றாகும். மேலும், ப்பான் விவசாய உற்பத்திப்பொருள் ஏற்றுமதியில் உலகளவில் இரண்டாம் இடம் வகிக்கின்றது. மீன்பிடித்தொழிலும் வளர்ச்சியடைந்துள்ளது. தானுந்து (Automobile) உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கிறது. 1995ம் ஆண்டுவரையில் மொத்தத் தேசிய உற்பத்தியின் படி உலகளவில் இரண்டாம் இடம் வகித்தது. தற்போது நான்காம் இடத்தில் உள்ளது.
72 ஆண்டுகளுக்கு முன் சாம்பல் மேடுகளின் பூமியாக இருந்த ப்பான் இன்று சாம்பலிலிருந்து மீண்டெழும் ஃபீனிக்சுப் பறவையாய் உயரப் பறக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

கிரந்தம் தவிர்ப்போம்

அக்கரைச் சீமையின் அழகு